பேர் கேட்கும் பிள்ளை
அம்மா செல்லமாய்
அழைக்க ஒரு பெயர்...
அப்பாவின் நண்பரிடம்
அறிமுகப்படுத்துவதெற்கென
ஒரு பெயர்...
தாத்தாவின் பொக்கைவாயில்
புதையாமல்புழங்க
ஒரு பெயர்
பள்ளியில்
பறை சாற்ற ஒரு பெயர்...
கல்யாணப் பத்திரிகையில்
ஜாதியோடு சேர்த்தடிக்க
ஒரு சம்ப்ரதாயஅவப்பெயர்...
தண்ணீரில் போட்ட பனியனாய்
பலரது
உமிழ்நீரில் பட்டு
சுருங்கிப் போகிறது
என் பெயர்...
இத்தனை பெயர்
இருந்தாலும்...
என் தாயின் பனிக்குட வாசல்
எனக்கு
என்ன பெயர் சொல்லி
விடையளித்திருக்கும்?
கல்லறை
என்னை அழைக்க
என்ன பெயர் வைத்திருக்கும்?
Friday, April 18, 2008
Wednesday, November 28, 2007
மீன் பாட்டு
நிஇரின் ராணி மீனாகும்
நிஇர்தான் அதற்கு உயிராகும்
கையால் டுங்கள் பயமாகும்
வெளியில் எடுங்கள் உயிர்போகும்
நிஇர்தான் அதற்கு உயிராகும்
கையால் டுங்கள் பயமாகும்
வெளியில் எடுங்கள் உயிர்போகும்
Tuesday, November 27, 2007
Subscribe to:
Posts (Atom)